‘குடும்பஸ்தன்’ படக்குழுவினர் மீண்டும் ஒரு படத்துக்காக இணைய உள்ளனர்.
அது ‘குடும்பஸ்தன்’ படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
மணிகண்டனைப் பொறுத்தவரை தாம் நடிக்கும் படத்தின் கதை விவாதத்திலும் வசனங்கள் எழுதும் பணியிலும் உடன் இருப்பது வழக்கம்.
ஏற்கெனவே ‘விஸ்வாசம்’, ‘விக்ரம் வேதா’, ‘தம்பி’ ஆகிய படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ‘குடும்பஸ்தன்’ குழுவின் அடுத்த படத்துக்கான கதை விவாதப் பணிகளிலும் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறாராம்.
ஆனால், நேரமின்மையால் அவர் இப்போது அவதிப்படுவதைக் கண்ட ‘குடும்பஸ்தன்’ இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, ‘பரவாயில்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ எனக் கூறிவிட்டதாகத் தகவல்.

