விக்ரம் நடிப்பில் வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புவதாக அப்படங்களின் இயக்குநர்கள் விருப்பம் தெரிவித்தபோதெல்லாம், “இதற்கு மேலும் இந்தக் கதையை இழுத்தால் அதில் சுவாரஸ்யம் இருக்காது. உப்புச் சப்பு இல்லாமல் அரைத்த மாவையே அரைப்பது போல் இருக்கும்,” என்று கூறி அடுத்தடுத்த பாகங்களில் நடிப்பதற்கு மறுத்து விடுவாராம் விக்ரம்.
ஆனால், ‘தங்கலான்’ படம் அண்மையில் திரைக்கு வந்துள்ள நிலையில், “இதுபோன்ற கதைகள்தான் ஒரு நடிகனுக்குத் தீனி போடக்கூடியவை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித் எப்பொழுது ‘தங்கலான்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்குத் தயாராக இருந்தாலும் அதில் நடிப்பதற்கு நானும் தயாராகவே இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

