தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டியூட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

1 mins read
b6fd28b7-7e8b-4add-82ce-8b81bfdae15f
‘டியூட்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

‘டிராகன்’ பட வெற்றியை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

அதனைத் தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள ‘டியூட்’ படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘ஊரும் பிளட்’ வெளியாகி இளையர்களால் பரவலாகப் பகிரப்பட்டது.

இந்நிலையில், ‘டியூட்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘நல்லா இரு போ’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் இளையர்கள் கொண்டாடுவார்கள் எனப் படக்குழு எதிர்பார்க்கிறதாம்.

குறிப்புச் சொற்கள்