ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

1 mins read
3cc52d8b-5d17-409b-acbb-6d7aa6a1408f
ரஜினி, சீமான். - படம்: ஊடகம்

நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கு அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை என்பதையும் உடனுக்குடன் தெளிவுபடுத்திவிட்டார்.

கோவாவில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவர் திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதை கௌரவிக்கும் விதமாக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள். மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவம் மிக்க தமது ஆற்றலால் திரைத்துறையில் இதுவரை யாரும் சாதித்திராத வகையில் வெற்றி நாயகனாக ஐம்பது ஆண்டுகளாகத் திகழும் அவரது கலைப்பணி மிகுந்த போற்றுவதற்கு உரியதாகும்.

“திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்தின் அயராத உழைப்பும் ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடம்,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்