தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேற முடியும் என்கிறார் நயன்தாரா.
மேலும், நேர்மையாக உழைப்பது முக்கியம் என்றும் ‘பெமி 9’ என்ற தனது சொந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“என் வாழ்க்கையில் நான் இதைப் பெரிதும் நம்புகிறேன். நான் சொன்னதுபோல் நடந்துகொண்டால் யார் நம்மை கீழே இறக்க வேண்டும் என நினைத்தாலும், நாம் முன்னேறிக் கொண்டேதான் இருப்போம்.
“நம்மைப்பற்றி கீழ்த்தரமாகச் சொல்பவர்கள் குறித்து கவலைப்படாமல் உழைத்தால், அந்த உழைப்பு நம்மைப் பேரளவில் உயர்த்தும்,” என்றார் நயன்தாரா. அவரது இந்தப் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.