நடிகர் அஜித் அண்மையில் திடீர்ப் பயணமாக மலேசியா சென்றிருந்தார். எதற்காக இந்தப் பயணம் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
மலேசியாவில் ‘24 எச்’ என்கிற கார் பந்தயம் நடக்கிறது. அதில் பங்கேற்கவே தனது குழுவினருடன் அங்கு முகாமிட்டுள்ளாராம் அஜித்.
இந்நிலையில், அவருடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்ட ஒரு ரசிகை ஆனந்தக்கண்ணீருடன் அந்த அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
“அஜித்தை முதன்முறையாக நேரில் பார்த்தேன். ஆர்வ மிகுதியால் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தேன். அதைப் பார்த்து அஜித் சார் என்னைக் கண்டித்தார்.
“இதனால் மிகுந்த வருத்தமடைந்து ஒதுங்கி நின்றேன். சில நொடிகளுக்குப் பிறகு திடீரென என்னை நோக்கித் திரும்பினார் அஜித். பின்னர் அவரே என்னை அழைத்து செல்பி எடுத்துக்கொடுத்தார்.
“என் வாழ்நாள் கனவு நனவான தருணம் அது. அந்த நொடியில் நான் உலகையே மறந்து போனேன்,” என்று அந்த ரசிகை மேலும் தெரிவித்துள்ளார்.

