விவாதப்பொருளான செல்வராகவனின் ஊடகப்பதிவு

விவாதப்பொருளான செல்வராகவனின் ஊடகப்பதிவு

1 mins read
950f25d9-3e5b-486a-b616-0b195c3ad162
செல்வராகவன். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சமூக ஊடகப் பக்கங்களில் அவ்வப்போது தத்துவப் பதிவுகளையும் அறிவுரைகளையும் பகிர்ந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டவர் முன்னணி இயக்குநரும் நடிகருமான செல்வராகவன்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு ஊடகப்பதிவு ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்படுகிறது.

“யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள். எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது,” என்பதே அவரது அந்தப் பதிவாகும்.

அண்மைக் காலமாகவே செல்வராகவனின் குடும்ப வாழ்க்கை குறித்த பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா வரும் நிலையில், இந்தப் பதிவு சில கேள்விகளை எழுப்பியுள்ளது

அவரது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையா அல்லது திரையுலகில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளாரா போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுகின்றன.

குறிப்புச் சொற்கள்