தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வைரமுத்து, இளையராஜாவுக்கு இடையே பிரிவுக்கான காரணம்

1 mins read
39489e1c-96bd-4cba-b795-bffcae7e8757
(இடமிருந்து) இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன். - படங்கள்: ஊடகம்

கவிஞர் வைரமுத்துவுக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இடையே பிரிவு ஏற்பட என்ன காரணம் என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இளையராஜா ஒரு காலகட்டத்தில் தம்மை பத்தாண்டுகள்போல் ஒதுக்கி வைத்ததாகவும் அப்போதுதான் அவரது இசையில் அதிகமான பாடல்களை எழுதி வைரமுத்து வளர்ந்தார் என்றும் திரைப்பட விழா ஒன்றில் பேசும்போது கங்கை அமரன் குறிப்பிட்டார்.

“அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் வைரமுத்து பேசும்போதெல்லாம், இளையராஜா திரையுலகில் வேகமாக வளர்ந்துவர தன் பாடல்களே காரணம் என்று குறிப்பிட்டு வந்தார். இதுகுறித்து என் அண்ணனிடம் (இளையராஜா) கூறியபோது அவர் நம்பவில்லை. பின்னர் ஆதாரபூர்வமாக அவர் உண்மையை அறிந்துகொண்டார்.

“அதன் பிறகுதான் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. தன்னால்தான் இளையராஜாவுக்கு வளர்ச்சி என்று வைரமுத்து பேசியதால்தான் சிக்கல் உருவானது,” என்று கங்கை அமரன் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்