‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதையும் முதல் பாகத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன்தான் இயக்குகிறார்.
பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு திரைக்கு வந்தது ‘மரகத நாணயம்’ படம்.
கற்பனையும் நகைச்சுவையும் கலந்த கதையுடன் உருவான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
முதல் பாகத்தில் நடித்த ஆதி, நிக்கி கல்ராணி ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளனர்.
இவர்களுடன் பிரியா பவானி சங்கர், சத்யராஜ் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இப்படக் குழுவினர் வெளியிட்ட விளம்பரக் காணொளியில் கற்பனையுடன் கூடிய நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

