படப்பிடிப்பின்போது படுகாயம் அடைந்த நடிகர் எஸ்.ஜே. சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இரு கால்களிலும் இரண்டு தையல்கள் போடப்பட்ட நிலையில், இரு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி நடித்தும் வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. இதில் அவருக்கு ஜோடியாகப் பிரீத்தி அஸ்ரானி நடிக்க, சென்னையை அடுத்துள்ள பனையூரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
செவ்வாய்க்கிழமையன்று ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கியபோது சற்றே தடுமாறி, எஸ்.ஜே. சூர்யா அங்கிருந்த கம்பி ஒன்றின்மீது மோதினார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் அதிக ரத்தப் போக்கும் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஓய்வெடுக்க ஏதுவாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

