நவம்பர் 29ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று திரை காண இருந்த ஒன்பது புதிய படங்களில் எட்டு படங்கள் வெளியீடாக உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழை காரணமாக ‘மிஸ் யூ’ படத்தின் வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘சொர்க்க வாசல்’ சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கும் படம் ‘சொர்க்க வாசல்’. இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் செல்வராகவன், நட்டி, ஹக்கிம் ஷா, சானியா அய்யப்பன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். சிறைக் கைதிகள் பற்றிய கதையாக ‘சொர்க்க வாசல்’ தயாராகி உள்ளது.
‘பரமன்’ விவசாயிகளைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது ‘பரமன்’ படம். இதில் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி நாயகனாக நடித்துள்ளார். அவருடன் பழ கருப்பையா, வையாபுரி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘மாயன்’ ராஜேஷ் கண்ணா இயக்கத்தில், பிரியங்கா மோகன், பிந்து மாதவி, ஆடுகளம் நரேன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாயன்’. உலகின் பேரழிவு, உலகம் உருவான கதை ஆகியவற்றைப் பற்றி இப்படம் விளக்கும் என்று கூறப்படுகிறது.
‘திரும்பிப்பார்’ வித்யா பிரதீப், ரிஷி ரித்விக், பிக்பாஸ் டானி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரும்பிப்பார்’ படத்தை கிரிதரன் தயாரித்துள்ளார். இப்படம் ‘ஷேடோ வாக்’ என்ற போர் தந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
‘சாதுவன்’ விஜய் விஸ்வா நடிப்பில் உருவாகி வரும் ‘சாதுவன்’ படத்தில் நாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். ஒரே இரவில் நடக்கும் திகிலூட்டும் கதையாக படம் உருவாகியுள்ளது.
டப்பாங்குத்து கிராமியக் கலைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், சங்கர பாண்டி நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து தீப்தி ராஜ், காதல் சுகுமார், ஆண்ட்ரிவ், துர்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
‘அந்த நாள்’ நாயகனாக ஷாம், நாயகியாக ஆதியா பிரசாத் நடித்துள்ள படம் ‘அந்த நாள்’. இப்படத்தை கதிரேசன் இயக்கியுள்ளார். ரகு நந்தன் தயாரித்துள்ளார்.
‘மிஸ் யூ’ ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் ‘மிஸ் யூ’ . அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கன் நடித்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் இப்படம் நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழையின் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
“அடுத்த வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இது கடினமான முடிவென்றாலும் ரசிகர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டது. உங்களை ‘மிஸ்’ செய்கிறோம்” என படக்குழு கூறியுள்ளது.