மே 23ஆம் தேதி ஏழு படங்கள் வெளியாக உள்ளன.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’, விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ ஆகிய படங்களுடன், ‘அக மொழி விழிகள்’, ‘ஆகக் கடவன’, ‘மையல்’, ‘திருப்பூர் குருவி’, ‘ஸ்கூல்’, உள்ளிட்ட படங்களும் அன்றைய தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியான படங்களுக்கு மிகச் சுமாரான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலையில் இருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
தமிழ்நாட்டில் கோடைப் பள்ளி விடுமுறை முடிவுக்கு வர உள்ள நிலையில், அவர்கள் எதிர்பார்த்த பெரிய வசூல், லாபம் மே மாதத்தில் அமையவில்லை. மே 1ல் வெளிவந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தைத் திரையிட்டவர்களுக்கு மட்டுமே லாபம் கிடைத்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.