தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏழு கடல் ஏழு மலை 2025ல் வெளியாகலாம்

1 mins read
ffee7123-406b-4e5d-a56d-5df34e030e7a
‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி. - படம்: சமூக ஊடகம்

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’ உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குநர் ராம்.

நீண்ட நாள்களுக்கு பின் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அண்மையில் ரோட்டர்டாம் அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதன் பின்னர் ரஷ்யாவின் மாஸ்கோ அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 

அந்த இரண்டு விழாக்களிலும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்துக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து டிரான்சில்வேனியா திரைப்பட விழாவுக்கு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டது.

இப்படத்தின் சில காணொளிகள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டன.  ராமின் முதல் படமான ‘கற்றது தமிழ்’ பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக கருத்துகளைப் பகிர்ந்தனர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திதிரையுலகம்

தொடர்புடைய செய்திகள்