அக்டோபர் மாதம் பெரிய படங்கள் வெளியீடாக இருப்பதால் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ஏழு தமிழ்ப் படங்கள் வெளியாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிப்ஹாப் ஆதி, சசிகுமார், அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சதீஷ் நடித்துள்ள படங்கள் வெளியாக உள்ளன.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, தானே தயாரித்து, இயக்கி நடிக்கும் ‘கடைசி உலகப் போர்’, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள ‘லப்பர் பந்து’, இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’, சாச்சி இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு நடித்துள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ள ‘தோனிமா’, அலெக்ஸ் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள ‘தோழர் சேகுவேரா’ ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

