மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்: இதுவரை 17 வழக்குகள் பதிவு

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்: இதுவரை 17 வழக்குகள் பதிவு

1 mins read
21a149ee-f7ca-471a-8591-1a0c82f890b1
படம்: - பிக்சாபே

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியது. இதனால், மலையாளத் திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இதுபோன்ற சம்பவங்கள் தங்களுக்கும் நடந்ததாகப் பல நடிகைகள் புகார் அளிக்கத் தொடங்கியதையடுத்து மலையாள நடிகர்கள் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. இதுவரை இதுதொடர்பாக 17 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சோனியா மலிஹார் என்ற நடிகை 2013ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்