நடிப்புத் தேர்வு என்ற பெயரில் தமக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை காவ்யா தாபர் தெரிவித்துள்ளார்.
இவர் தமிழில் ‘பிச்சைக்காரன் 2’, ‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், திரையுலகுக்கு வருவதற்கு முன், தான் விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது இயக்குநர் ஒருவர் வாய்ப்பு தருவதாகக் கூறி தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் காவ்யா கூறியுள்ளார்.
“பாலியல் ரீதியில் நான் ஒத்துழைத்தால் நான்கு பட வாய்ப்புகள் கிடைக்கும்,” என்று அவர் வெளிப்படையாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ‘அப்படிப்பட்ட வாய்ப்புகள் தேவையில்லை’ எனக் கூறி வந்துவிட்டேன்.
“என்னை நடிகையாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் தந்தையின் கனவு. அதனால்தான் சினிமாவுக்கு வந்தேன்,” என்று காவ்யா தாபர் மேலும் தெரிவித்துள்ளார்.