‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பது உறுதியாகிவிட்டது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ் குமார் ஆகியோர் அடுத்த பாகத்திலும் நடிக்கின்றனர்.
இவர்கள் மட்டுமல்லாமல் இரண்டாம் பாகத்துக்காக எஸ்.ஜே.சூர்யா, நடிகர் சந்தானம், இந்தி நடிகை வித்யாபாலன் ஆகியோரும் ஒப்பந்தமாகி இருந்தனர்.
இந்நிலையில், ஷாருக்கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிப்பார் என ஒரு தகவல் வெளியானது. ஆனால், தயாரிப்புத்தரப்பு இதை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ‘ஜெயிலர்-2’ல் ஷாருக்கானும் நடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

