தமிழ்த் திரையுலகில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவுதான். நடிப்பைத் தவிர மற்ற சினிமா வேலைகளைச் செய்ய அவர்களுக்கு உரிய வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.
பெண் இசையமைப்பாளர்கள் அருகிவிட்ட காலத்தில், பின்னணிப் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவாகி இருக்கிறார்.
இவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. எனவே, அவர்களை ஏமாற்றக்கூடாது என்று முடிவெடுத்து, சக்திஸ்ரீ தொடர்ந்து திரைப்படப் பாடல்கள் பாடுவதிலும் முனைப்பாக இருக்கிறார்.
அதேசமயம் நல்ல கதைக்களத்துடன் கூடிய படங்களுக்கு இசையமைக்க தாம் எப்போதுமே தயார் என்றும் கூறியுள்ளார் சக்திஸ்ரீ.
‘டெஸ்ட்’ படத்தில் இவரது இசை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்ததாக சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.