தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இட்லி கடை’யில் இணையும் ஷாலினி

1 mins read
2b28e4c0-b09b-41e0-9f04-67371e790cd5
ஷாலினி பாண்டே. - படம்: ஊடகம்

தனுஷ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரை காண்கிறது.

இதில் அவருடன் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஷாலினி பாண்டேவும் இப்படத்தில் இணைந்துள்ளாராம். அவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளாராம்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் அறிமுகமான ஷாலினி, அதன் பின்னர் தமிழில் ‘100% காதல்’, ‘கொரில்லா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

‘இட்லி கடை’ படத்தில் சில காட்சிகளில் மட்டுமே திரையில் தோன்றினாலும், ஷாலினிக்கு அழுத்தமான கதாபாத்திரம் அமைந்திருப்பதால் தயக்கமின்றி நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்