‘டப்பா கார்டெல்’ இணையத் தொடரில் மூத்த இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி, ஜோதிகா, நிமிஷா சஜயன், அஞ்சலி ஆனந்த் ஆகியோருடன் நடித்திருக்கிறார் ஷாலினி பாண்டே.
இத்தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அண்மைய பேட்டியில் தனது ‘கிளைட்’ பயணம் குறித்த சுவாரசியத் தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“எனது பயணம் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் நம்ப முடியாததாகவும் இருந்தது. நான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது.
“நான் ஒரு நடிகை. அதனால் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் என்னால் வளர்ச்சி அடைய முடியும்.
“இந்தப் பயணம் என்னை இங்கிருந்து எங்கு அழைத்துச் செல்லும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறியுள்ளார் ஷாலினி பாண்டே.