இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு, ‘பல்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக கபடி வீரர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம்.
‘பறவ’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘இஷ்க்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் 25வது படம் இது. இவரும் கபடி வீரராகத்தான் நடிக்கிறார்.
உன்னி சிவலிங்கம் இயக்கும் இப்படம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒருசேர தயாராகி வருகிறது. பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கதைப்படி, சாந்தனுவின் கதாபாத்திரத்துக்கு ‘குமார்’ என்று பெயராம். நாயகன் ஷேன் நிகம் எதிரணி வீரராக வருகிறார்.
இப்படத்தில் பிரபல மலையாள இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்ரன் ‘சோடா பாபு’ எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கெனவே வெளியான அறிவிப்பு, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.