காதல் தோல்வி குறித்து வெளிப்படையாகப் பேசிய ஷிவாங்கி

1 mins read
b3228cae-bab3-4a8f-8314-1f97a70ce03c
ஷிவாங்கி. - படம்: ஊடகம்

காதல் தோல்வி குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஷிவாங்கி.

தனியார் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.

பின்னர் ‘டான்’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என சில திரைப்படங்களிலும் நடித்தார்.

அவரும் ஓர் இசைப் பிரபலத்தின் மகனும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அக்காதல் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

“நான் ஒருவரைக் காதலித்தேன். ஆனால், அக்காதல் முறிந்துவிட்டது. எனினும் இந்த முறிவு எனக்குப் பெரிய மன வலிமையைக் கொடுத்தது. என்னை நானே பார்த்துக்கொள்ள கற்றுக்கொண்டேன்.

“அழகான ஆண்கள் ஊர் முழுக்க இருப்பார்கள். நமக்கு அவர்களைப் பிடிக்கும். ஆனால், அவர்களுக்கு நம்மைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது,” என்று ஷிவாங்கி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்