சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப் படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
தற்போது ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் சிவா.
இதையடுத்து, ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.
இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். ஆனால், சில காரணங்களால் அவர் திடீரென படத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவிக்க, ஸ்ரீலீலா பெயரைப் பரிந்துரை செய்தது சிவகார்த்திகேயன்தான் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ‘பராசக்தி’ படத்திலும் சிவாவும் ஸ்ரீலீலாவும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.