டி.டி.பாலசந்திரன் இயக்கியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’.
இதில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேபோல் அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.
மேலும், நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், ஷ்ரிதாராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
“தமிழ்த் திரையுலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கங்கை அமரன் பன்முகத் திறமையாளர். அவர் இப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ரோஜா வழக்கம்போல் முத்திரை பதிப்பார் என நம்பலாம்.
“சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் இந்தப் படத்தில் நடிப்பது கூடுதல் தகவல். இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் கவரும்,” என்கிறார் இயக்குநர் டி.டி.பாலசந்திரன்.
இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி தற்போது வெளியாகி உள்ளது. அதில் தர்ஷன் கணேசன் காவல்துறை உடையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.
கிராமப்புற வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.

