பத்ம பூஷண் விருதுக்கு தேர்வான மகிழ்ச்சியில் உள்ளார் நடிகை ஷோபனா.
‘கல்கி 2898 ஏடி’ படத்தில் இவர் நடித்த மரியம் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதையடுத்து இந்தியில் உருவாகும் ‘ராமாயணா’ படத்தில் இணைந்துள்ளாராம்.
இதில் ரன்வீர் கபூர் ராமர் வேடத்திலும் சாய் பல்லவி சீதை வேடத்திலும் நடிக்கின்றனர்.
ராவணனின் தாயார் கைகேயி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஷோபனா. இதில் அவரது தோற்றம் மிரட்டலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
‘ராமாயணா’ படம் அடுத்த ஆண்டு தீபாவளியின்போது திரைகாண உள்ளது.

