காஞ்சனா 4ஆம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியது

1 mins read
677fedfa-87e2-4ccc-aacb-9632f3358538
காஞ்சனா படத்தின் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ். - படம்: ஊடகம்

நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தொடர்ந்து பேய் தொடர்களாக வெளிவந்த படம் ‘காஞ்சனா’. இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் கடந்த வாரத்தில் காஞ்சனா 4ஆம் பாகத்தின் பணிகளை ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார்.

சுமார் ரூ.130 கோடிக்கு மேல் பொருள்செலவில் இப்படம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான நோரா பதேகி நடிக்கின்றார். மற்றபடி இதற்கு முன் காஞ்சனா படத் தொடர்களில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் இதிலும் நடிக்கவுள்ளனர்.

தற்பொழுது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை பொள்ளாச்சியில் லாரன்ஸ் தொடங்கியுள்ளார். விரைவில் படம் பற்றிய அடுத்தடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்