38 நாள்களில் முடிந்த ‘2கே லவ்ஸ்டோரி’ படப்பிடிப்பு

1 mins read
0d27c736-2120-4cd0-b50c-4644782a640c
படம்: - ஊடகம்

முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரிக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படமான, ‘2கே லவ்ஸ்டோரி’ படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் 38 நாள்களில் முடித்து அசத்தியுள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனத்தை வென்ற இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை இயக்கியுள்ளார்.

திருமணங்களைப் படமெடுக்கும் புகைப்படக் கலைஞர்களாக இருக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்