தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம்

1 mins read
f1573665-581e-4fce-aeaf-ee8bc1ece869
நடிகர் ரஜினிகாந்த். - படம்: சமூக ஊடகம்

ரஜினிகாந்த் நடித்த, ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

இயக்குநர் நெல்சன் இயக்கிய இந்தப் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டன.

தற்போது இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். கலாநிதி மாறன் படத்தை தயாரிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்