‘லவ் டுடே’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து விக்னேஷ் சிவனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
நான்காவதாக அவர் நடிக்கும் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் அந்தப் படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.
அதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார்.
சரத்குமார், ஹிருது ஹரூன், டிராவிட் செல்வம் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.