ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு இதுதொடர்பாகப் பேட்டி அளித்துள்ளார்.
“ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும். ஒரு வாரத்துக்கு முன்பு வெற்றிமாறனை சந்தித்தபோது 25 நிமிடங்கள் கதை சொன்னார். இதுவே போதும் என்று கூறினேன். அந்த 25 நிமிடக் கதையிலேயே மிகச் சிறப்பான திரைக்கதை, நடிப்பு இருக்கிறது. உலகத் தமிழர்களுக்கு இப்படம் ஓர் அத்தியாயம், கலாசாரமாக இருக்கும்” என்று தாணு தெரிவித்துள்ளார்.
தாணுவின் இந்தப் பேட்டி சூர்யா ரசிகர்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தக் காணொளி பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குவது குறித்து தாணு இதற்கு முன்பு பலமுறை பேட்டியளித்துள்ளார்.
ஆனால், படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தமுறை கண்டிப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தொடங்கப்படவுள்ள படம் ‘வாடிவாசல்’.
இதில் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

