தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் நாயகியாக ஷ்ரத்தா

1 mins read
eee76b74-8f9c-4893-b442-4dd4c632ba26
ஷ்ரத்தா ஸ்ரீநாத். - படம்: ஊடகம்

‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘மாறா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

கடைசியாக ‘இறுகப்பற்று’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், மூவாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘கலியுகம்’ படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

மே 9ஆம் தேதி திரைக்கு வரும் அப்படத்தை அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியுள்ளார்.

“பேரழிவுகளால் சூறையாடப்படும் உலகில், உயிர்வாழ்வதே மிகவும் சிக்கலாக இருக்கிறது. அப்படிப்பட்ட உலகில் வாழ முயலும் மனிதர்களின் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தைத் தான் அப்படம் பேச வருகிறது,” என ‘கலியுகம்’ படத்தின் இயக்குநர் கூறினார்.

மேலும், முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன் ரசிகர்களை அப்படம் ஒரு புதிய உலகிற்குக் கூட்டிச் செல்லும் என்றார் இயக்குநர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்