இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க விரும்புவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தெலுங்கில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஷ்ரத்தா கபூர் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட உள்ளார்.
ரூ.400 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில், இடம்பெறும் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நடனமாட ஸ்ரீலீலா, கிருத்தி திமுரி ஆகியோருடன்தான் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். எனினும் பின்னர் ஷ்ரத்தா கபூர் ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக அவர் பெற்ற ஊதியம் மற்ற இளம் நாயகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.