‘ஜெயிலர்-2’ படத்தில் இடம்பெறும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் (படம்) நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் ‘காற்று வெளியிடை’, ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா. தற்போது ‘ஆரியன்’ என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார்.