நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் தலைகாட்ட உள்ளார் நடிகை ஸ்ரேயா.
சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் ‘சூர்யா 44’ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாடலுக்கு மட்டும் நடனமாடும்படி ஸ்ரேயாவை இப்படக்குழு அணுகியுள்ளது.
முன்பு கோடம்பாக்கத்தில் முன்னணி நாயகியாக கோலோச்சியபோது சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஸ்ரேயாவைத் தேடி வந்ததாம். ஆனால், சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பு கைநழுவிப் போனதாம்.
இந்நிலையில் மீண்டும் சூர்யா படம் என்றவுடன் மிகவும் உற்சாகமாகிவிட்டாராம் ஸ்ரேயா. அதனால் அவர் தயக்கமின்றி நடனமாட ஒப்புக்கொண்டாராம்.
படத்தின் திருப்புமுனையாக அமையவுள்ள பாடல் காட்சியில்தான் ஸ்ரேயாவின் நடனம் இடம்பெறுகிறது.

