புதுடெல்லி: நல்லதொரு மனிதரைத் தான் இழந்து வாடுவதாகப் பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல் உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.
அசாமியப் பாடகர் ஸுபீன் கார்கின் மறைவுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவின் பிரபல பாடகராகத் திகழ்ந்த ஸுபீன் கார்க் சனிக்கிழமை (செப்டம்பர் 20) சிங்கப்பூரில் காலமானார். இந்நிலையில், அவரை நினைவுகூர்ந்த ஷ்ரேயா கோஷல், “ஸுகீன் கார்க் நமது நாட்டின் ஒரு தனித்துவமான கலைஞர், ஒரு மெகா ஸ்டார். ஒரு நல்ல மனிதர். அவருடைய கலைத் திறமைக்கு, அவரது குரல் வளத்துக்கு நான் எப்போதுமே ஒரு ரசிகை.
அவருடன் சேர்ந்து அசாமியப் பாடல்கள் சிலவற்றில் பணியாற்றும் மாபெரும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. ஸுபீன் ஆத்மா சாந்தியடையட்டும்,” என்று வருத்தத்துடன் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் பிறந்த ஸுபீன் கார்க் வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக அசாமிய மொழியில் பல பாடல்களைப் பாடி அந்த மாநில மக்களிடையே நன்கு பரிச்சயமானவரானார். அவரின் மறைவையொட்டி அசாமில் மூன்று நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசாங்கம் அறிவித்திருந்தது.

