பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் பங்கேற்ற இசை நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
இதற்காக மேடையேறிய ஸ்ரேயா கோஷல், அங்கு நிறைமாதக் கர்ப்பணி ஒருவரும் கணவருடன் வந்திருப்பதைப் பார்த்தார்.
உடனே, அந்தப் பெண்ணை நோக்கிச் சென்ற அவர், அன்பாக நலம் விசாரித்ததுடன், சட்டென முழங்காலிட்டு அமர்ந்து, அப்பெண்ணின் வயிற்றுக்கு அருகே முகத்தை வைத்துப் பாடத் தொடங்கினார்.
முதல் வரியைப் பாடியதும் குழந்தை அசையத் தொடங்கியது. இதைக் கண்ட ஸ்ரேயா கோஷலுக்கு மேலும் உற்சாகம் எழுந்தது. அவர் பாடப்பாட, ஒவ்வொரு வரிகளுக்கும் குழந்தை நடனம் ஆடுவது போல் வயிற்றுக்குள் இருந்து குழந்தையின் அசைவு வெளிப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரேயா கோஷல், ‘எல்லாம் நன்றாக இருக்கிறது’ என வயிற்றைத் தொட்டு பாடலைப் பாடி முடித்தார்.
இந்தக் காணொளி இணையத்தில் பலரால் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது.