தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் ஸ்ரேயா

1 mins read
b90c7041-702e-4515-b0f5-7a7b00eec9fe
ஷ்ரேயா. - படம்: ஊடகம்

நடிகை ஸ்‌ரேயா சரண் முதன்முதலாக சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

நடிகை ஸ்ரேயா சரண் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய சினிமாவில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.

திருமணத்திற்குப் பிறகு ஸ்ரேயா படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரேயா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.

இப்போது இந்தப் படத்தில் ஒரு சிறப்புப் பாடல் இடம் பெறுகிறது. இதில் சூர்யாவுடன் இணைந்து ஸ்ரேயா நடனமாடுகிறாராம். இதன் மூலம் முதன்முறையாக சூர்யா படத்தில் ஸ்ரேயா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாசெய்தி