தாம் அழகாக இருப்பதற்கு தமது பெற்றோர்தான் காரணம் என்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
அண்மையில் இன்ஸ்டகிராம் மூலம் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது ஒரு ரசிகர், இவரது அழகின் ரகசியம் குறித்து கேட்க, தயக்கமின்றி பதிலளித்தார் ராஷ்மிகா.
“உண்மையான, அன்பான, நல்ல மக்கள் என்னைச் சுற்றி இருப்பது என் மனத்தையும் இதயத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. அவர்கள்தான் என் சருமத்தைப் பராமரிக்க உதவும் சிறந்த தோல் மருத்துவர்கள்.
“பெற்றோரும் அவர்களது நல்ல மரபணுக்களின் ஆசிர்வாதம்தான் இந்த அழகின் ரகசியம்,” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.
தற்போது தனுஷ் ஜோடியாக ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.