தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை அனைத்துலகத் திரைப்பட விழாவில் ‘செவப்பி’

1 mins read
eac53f3d-4422-4c2b-8287-d17c9f560190
அனைத்துலகத் திரைப்பட விழாவில் வெளியிடப்படுகிறது ‘செவப்பி’ படம். - படம்: ஊடகம்

சென்னை அனைத்துலகத் திரைப்பட விழாவில் ‘செவப்பி’ திரைப்படம் வியாழனன்று திரையிடப்பட்டது. ‘ஆஹா ஓடிடி’யில் வெளியான ‘செவப்பி’ படத்தை எம்எஸ்.ராஜா இயக்கியிருந்தார். கோவையைச் சேர்ந்த சிறுவன் ஷ்ரவன் கதையின் நாயகனாக நடித்திருந்தான். இந்தச் சிறுவன், தயாரிப்பாளர் பழனிச்சாமியின் பேரன். ‘செவப்பி’ படத்தில் செபஸ்டின் அந்தோணி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்காக ‘ஐவிஎம் புஷ்’ நிறுவன விருதை சிறுவன் ஷ்ரவன் பெற்றுள்ளான். விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டைப் பெற்றுள்ள இப்படம் வியாழன் பகல் 11.45 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்குகளில் உள்ள சீசன் திரையில் திரையிடப்பட்டது

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை