தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடிக்கும் ஸ்ரீலீலா, இந்திப் படங்களில் நடிக்க பாலிவுட்டில் முகாமிட்டு இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஸ்ரீலீலா, தற்பொழுது மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இதுதவிர தமிழில் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வரும் அவர், இந்தியில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக ‘ஆஷிகி 3’ என்ற படத்திலும் நடிக்கிறார்.
அந்தப் படங்களைத் தொடர்ந்து இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ஒரு படத்தில் இணைகிறார் ஸ்ரீலீலா. அந்தப் படத்தை ராஜ் சாண்டில்யா இயக்குகிறார். இது தவிர இந்தியில் இன்னும் சில படங்களில் நடிப்பதற்கும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தெலுங்கில் ஸ்ரீலீலா, நடித்த ‘எக்ஸ்ட்ரா ஆடினரி மேன்’, ‘ஆதிகேசவா’, ‘ஸ்கந்தா’ போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், கடைசியாக நிதினுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘ராபின்ஹுட்’ என்ற படம் மட்டும் தோல்வியைச் சந்தித்தது.
இதன் காரணமாகவே அடுத்தபடியாக இந்தியிலும் அழுத்தமாக கால் பதிக்கும் நோக்கத்தில் மும்பையில் முகாமிட்டு புதிய பட வேட்டையில் தீவிரம் காட்டி வருவதாகவும் தெலுங்கு வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.