திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து தற்காலிகமாக விலகியிருந்த நடிகை ஸ்ரேயா சரண், தற்போது மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக ஜொலித்த இவர், தமது நடனத்தாலும் எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆவார்.
தற்போது தமிழில் ‘சண்டக்காரி’, ‘நான் வயலென்ஸ்’ உள்ளிட்ட புதியத் திரைப்படங்களில் இவர் மும்முரமாக நடித்து வருகிறார்.
இதனிடையே, அண்மையில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், “எப்படி அழகு குறையாமல் வலம் வருகிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஸ்ரேயா, “நான் என் மனதில் எதையும் ஒளித்து வைப்பது கிடையாது. மனதில் தோன்றுவதை அப்படியே வெளிப்படையாகப் பேசிவிடும் தெளிவான மனநிலையே இதற்குக் காரணம். இயற்கையும் இறைவனும் கொடுத்த அழகைப் பொறுப்புடன் பாதுகாத்து வருகிறேன்; அவ்வளவுதான்” என்றும் ஸ்ரேயா விவரித்தார்.

