‘சென்னை ஸ்டோரி’ படத்திலிருந்து சமந்தாவைத் தொடர்ந்து ஷ்ருதிஹாசனும் விலகியுள்ளார்.
சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் திமேரி என்.முராரி (Timeri N.Murari) எழுதிய ‘அரேஞ்மென்ட் ஆஃப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலப் படமொன்று உருவாகிறது.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்குச் ‘சென்னை ஸ்டோரி’ என்று பெயரிட்டு பணிகளைத் தொடங்கினார்கள்.
இதனை பாஃப்டா விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் நாயகியாக முதலில் சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தேதிகள் பிரச்சினையால் படத்திலிருந்து விலகினார். பின்பு அவருக்குப் பதிலாக ஷ்ருதிஹாசன் ஒப்பந்தமானார்.
தற்போது ஷ்ருதியும் தேதிகள் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து நாயகியாக யார் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.
‘சென்னை ஸ்டோரி’ மட்டுமன்றி ஆத்வி சேஷுடன் நடித்து வந்த ‘டாகோயிட்’ படத்திலிருந்தும் ஷ்ருதிஹாசன் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.