‘லோகா’ படத்தின் மூலம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு லாபம் பெற்றுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
இதையடுத்து, அவரது நடிப்பில் உருவாகும் 41வது படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கௌரவ வேடத்திலாவது நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.
கதைப்படி, இந்தப் படத்தில் இரண்டு நாயகிகளாம். பூஜா ஹெக்டே ஒரு நாயகி எனத் தொடக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், இன்னொரு நாயகி யார் என்ற கேள்வி எழுந்தது.
கல்யாணி பிரியதர்ஷனுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் நினைக்க, படத் தயாரிப்புத் தரப்போ, ஷ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இதனால் கல்யாணி பெரும் வருத்தத்தில் உள்ளாராம்.
‘சலார்-2’ எனப் பெரிய பட்ஜெட் படங்களில் சத்தமில்லாமல் வாய்ப்பு பெற்று நடித்து வருகிறார் ஷ்ருதி.
இது எப்படி சாத்தியமாகிறது என்ற சூட்சுமம் புரியாமல் குழம்பி நிற்கிறார்கள் மற்ற நாயகிகள்.