‘வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சியான்-63’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. போடி ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் ஷ்ருதி ஹாசனை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘மாவீரன்’ படத்தைத் தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரிக்கிறது.
தொடக்கத்தில் ஷ்ருதிக்குப் பதிலாக வேறு நாயகியை நடிக்க வைப்பது குறித்து தயாரிப்புத் தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாம்.
ஆனால், அறிமுக இயக்குநர் என்றாலும் தன் கதைக்கு ஷ்ருதிதான் பொருத்தமான நாயகியாக இருப்பார் என்று வாதாடி ஷ்ருதிஹாசனை தன் படத்தில் நடிக்க வைத்துள்ளார் போடி ராஜ்குமார்.

