ஷ்ருதிஹாசன் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் ‘தி ஐ’ (The Eyee).
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் வெளியீடு காண தயாராகிவிட்டது. எனினும், சில அனைத்துலக திரைப்பட விழாக்களில் மட்டும் பங்கேற்றது.
இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பை வெளியிட்டுள்ளனர். மனோதத்துவ, திகில் கதையைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது தெரியவந்துள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.
படம் விரைவில் திரைகாண உள்ளதாகத் தகவல்.