ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தந்தை கமல்ஹாசனின் படத்தில் பாடியுள்ளார் ஷ்ருதிஹாசன்.
37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’.
சிம்புவும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ‘விண்வெளி நாயகன்’ என்ற பாடலைத் தான் ஷ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன். கடைசியாக ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலைத்தான் ரகுமான் இசையில் அவர் பாடியிருந்தார்.
இதேபோல், கடந்த 2009ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும் பாடியிருந்தார். இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் ஷ்ருதிதான்.