ஒரே நாளில் 11 மில்லியன் பார்வைகளைக் கடந்த ஷ்ருதியின் பாடல்

1 mins read
1419d3c9-f43f-4db3-8390-545edff7037a
ஷ்ருதிஹாசன். - படம்: ஜூம் டிவி

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘டிரெயின்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஷ்ருதிஹாசன்.

‘’கண்ணக்குழி காரா’ என்ற அந்தப் பாடலை கபிலன் எழுத, மிஷ்கின் இசையமைத்துள்ளார்.

இது வழக்கமான காதல் பாடல் அல்ல என்றும் கிராமிய மண்வாசனை வீசும் பாடல் என்றும் கூறுகிறார் மிஷ்கின்.

கேட்க எளிமையாக இருந்தாலும் உணர்வுபூர்வமான காதலின் வெளிப்பாட்டை இப்பாடலில் உணர முடியும் என்கிறார் ஷ்ருதி.

இப்பாடல் யூடியூப் தளத்தில் வெளியான ஒரே நாளில் 11 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

‘டிரெயின்’ படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்