நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்துகொள்ள தாம் ஒரு நொடிகூட யோசிக்கவில்லை என்று நடிகை அதிதி ராவ் கூறியுள்ளார்.
சித்தார்த் செயற்கைத்தனமற்ற நல்ல மனிதர் என்றும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கக்கூடிய அன்பான மனிதர் என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு நெருக்கமானவர்கள் என்றால் அவர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிப்பார். அவரது இந்தச் செயல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
“அவரைத் திருமணம் செய்துகொள்வதற்கு அவரது இதுபோன்ற நல்ல செயல்பாடுகள்தான் காரணம். திருமணம் நடந்தபோது எனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
“இப்போது மீண்டும் அவரவர் பாதையில் செல்லத் தொடங்கி படங்களில் நடித்து வருகிறோம்,” என்றார் அதிதி ராவ்.
கடந்த 2021ஆம் ஆண்டில் வெளியான மகா சமுத்திரம் என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தபோது சித்தார்த், அதிதி இடையே காதல் மலர்ந்து, பின்னர் அது திருமணத்தில் முடிந்தது.