‘சிக்மா’வின் முதல் பிரதி தயார்

1 mins read
de0e8c83-c1f2-464c-97f6-3e35457313fb
‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பில் ஜேசன் சஞ்சய். - படம்: விகடன்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், முதல் பிரதியும் ஏறக்குறைய தயாராகிவிட்டதாம்.

மகன் படம் இயக்குவது குறித்து விஜய் இதுவரை பெரிதாகக் கருத்து எதுவும் சொல்லவில்லை. படப்பிடிப்பு நடந்த இடத்துக்கும் ஒரு முறைகூட அவர் நேரில் சென்றதில்லை.

இந்நிலையில், படத்தை முதலில் தன் தந்தைக்கும் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் திரையிட்டுக் காட்டத் தயாராகி வருகிறார் ஜேசன்.

லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ என ஜேசனுக்குப் பிடித்தமான இயக்குநர்களின் பட்டியலில் பலர் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் படம் பார்க்க சிறப்புக்காட்சி ஒன்றுக்கும் அவர் ஏற்பாடு செய்து உள்ளதாகத் தகவல்.

அனேகமாக, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதற்கு முன்பே ‘சிக்மா’ படம் வெளியாகக்கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

குறிப்புச் சொற்கள்