புலனாய்வுக்குழு உறுப்பினராக நடித்துள்ள சிஜா ரோஸ்

1 mins read
91800eff-5d63-4e8e-8e20-b62bd6d1ca2b
சிஜா ரோஸ். - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சிஜா ரோஸ்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் தமிழில் அறிமுகமான இவருக்கு, அதன் பிறகு நல்ல வாய்ப்புகள் ஏதும் கிட்டவில்லை.

இந்நிலையில், சரத்குமார் நடித்துள்ள ‘தி ஸ்மைல் மேன்’ என்ற படத்தின் மூலம் அடுத்த சுற்றுக்குத் தயாராகி உள்ளார் சிஜா ரோஸ்.

இதில் சரத்குமார் புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார். அவரது குழுவில் ஒருவராக வருகிறார் சிஜா ரோஸ்.

“அடுத்து, கபடி வீரர் ஒருவரது வாழ்க்கைப் படத்தில் நடிக்க உள்ளேன். ‘றெக்க’ படத்துக்குப் பிறகு குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் தேடி வந்தன. ஆனால், அவையெல்லாம் ஒரே மாதிரியாக இருந்ததால் ஏற்கவில்லை.

“இந்நிலையில், புலனாய்வுக் குழு உறுப்பினராக நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் சிஜா ரோஸ்.

குறிப்புச் சொற்கள்